Friday, August 11, 2006

படம்

வேக வேகமா சைகில் மிதிச்சதுல கால் வலி தாங்கல... மொத நாள் மொத ஷொ... நல்ல கூட்டம் இருக்கும்... சீக்கிரமா போய்ரனும்... இல்ல அவ்வளவுதான்!!! நேரா சைக்கில் கடைலெருந்து தியேட்டர்க்கு போயிருக்கலாம். என்ன பன்னுரது பசி தாங்கல... நெத்தைக்கு வெச்ச பழய சொறு நியாபகம் வந்துச்சு. ஒரே மிதி... வீட்டுக்கு வந்தாச்சு.காலங்காத்தால ரோட்ல ஆலெ இருக்காது. ஆனா தீயேட்டர் பக்கம் நெருங்குனா... அம்மாடி!!! யென்னா கூட்டம் இருகும்??!!!!!! போன படம் ரிலிசு ஆகும்பொது லத்தி சார்ஜ் கூட நடந்துச்சு.
"டேய் வீரா, கூட்டமா இருக்கும்டா... இன்னைக்கு அந்த பக்கம் போகாதடா... ஒரு வாரம் போகட்டும்டா..."
"யம்ம! ஒனக்கு வெர வெல இல்லயா?... சும்மா எதையாவது சொல்லி கிட்டே இருப்ப... சோத்த போடு... சாப்புட்டு கெளம்பனும்"
"போட்டு தொலையுரென்... மொத ஷொ-க்கே பொகனுமோ?"
"அதெல்லம் எங்களுக்கு தெரியும்... இதுவரைகும் மொத்தம் 24 படம்... மொத ஷொ..."
"பெரிய சாதன...."
"சாதாரனமா 4 ஷொ ஒட்டுவான்க... மொத ஒரு வாரதுக்கு 6 ஷொ... Daily ரெண்டு ஷொ ரசிகர் மன்ற ஷொ... எல்லா ஊருலெருந்தும் பயலுவ வருவானுங்க... "
"என்ன கருமமோ போ..."

பாதி சாப்பாடு ஆச்சு. விக்கல்.
"தண்ணிய குடும்மா..."
"மெதுவா சாப்புட்டு தொல... தீயேட்டர் ஓடி பொயிராது... படம்மும் ஓடி பொயிராது..."
"தொ பாரு... சும்ம வாய வைக்காத... படம் நல்லா ஓடனும்... மொத நாள்... 6 ஷொ....ஸுப்பர் ஹிட் ஆகனும்.... 200 நாள் ஓடனும்... "

"எதோ நீ காசு போட்டு எடுத்த மாதிரி குதிக்கிர..."
மிச்ச சொறும் ஆச்சு. கப்-ல இருந்த மிச்ச தண்ணில தட்டுல கைய கழுவீட்டு கெளம்பீட்டென்.
"எலேய்! எப்பல வருவ?..."

"இன்னும் கெளம்பவே இல்ல... அதுகுல்ல 'யெப்ப வருவ'.... மொத நள்ள?... கூட்டத பொருத்து..."
"இது புது சேருப்புல... இத போட்டுகிட்டு போய் அறுத்துகிட்டு வராத... "
"செருப்பே போடம பொக சொல்லுரியா?? வெளங்கும்... கொன்ஜ நெரத்துல வெயில் வந்துரும்... காலு பொத்து பொயிரும்..."
சைகில் ஸ்டான்ட தட்டி விட்டு ஏருனென். ஓரெ அழுத்து.
"பாத்து பொய்ட்டு பாத்து வால..."
"செரி செரி..."

வெகமா மிதிச்சென்... இன்னும் ரெண்டு திருப்பம் தான்... தியேட்டர் சந்து வந்துரும்.

தியேட்டர் சந்து. ரெண்டு போலீஸ். மொத நாள் ஷொ-ல? அதான்... போன தடவ வாங்குன லத்தி அடி இன்னும் நியாபகம் இருக்கு. ஆரரை தான் ஆகுது...இப்பவே கூட்டம் கேட்-க்கு வந்துருச்சு. சைக்கில ஒரம வைக்கனும். எங்க வைக்குரது?!?!... குமார் அண்ண(ங்) கடைல வைக்க வெண்டியதுதான். ஆனா அவரு கடைய திறக்க ஏலு ஆகும். அதுவரைகும் என்ன பன்னுரது?!?!?!?!... சைக்கில ஊருடிகிட்டு கூட்டம் பக்கம் பொய் நிந்நே(ன்). கூட்டத்துக்கு இடைல முத்து நின்னுகிட்டு இருதான்.
"எலேய் வீரா!!!!!!!... எப்பல வந்த?!?! கூட்டத பாத்திய??.."
"இப்பதான் வந்தேன்... சைக்கில வைக்கனும்..."
"குமார் அண்ண(ன்) வர லேட் ஆகும் பொல இருக்கு... நேர போய் நம்ம டீ கடை ஸ்டாண்டுல வை.."

"அவ(ன்) 5 ரூபா கேப்பான்..."
"மொத நாள் ஷொ... யொசிக்காத... பொய் வச்சுட்டு வா..."

டீ கடை ஸ்டன்ட்ல வச்சுட்டு, கசங்கி போன அஞ்ஜு ரூபா நோட்ட குடுத்தேன். ஒரு மாதிரி பாத்தான்.
"கவர்மன்டே இப்ப பழய அஞ்ஜு ரூபா நோட்டுதான் அச்சு அடிக்கிராங்க... எல்லம் செல்லும்..."
"இந்த வாய்க்கு மட்டும் கொறச்சல் இல்ல. டோக்கன புடி. தொலச்சுராத..."
"ஆமா... பெரிய டோக்கன்! சிகரட் அட்டைல 8-னு போட்டுருக்க... தொலச்சா நா(ன்) நல்ல அட்டைல எழுதி தாரே(ன்)..."

குடுத்த டொக்கன்-அ வாங்கிகிட்டு ஓடி வந்தென். முத்து கைல 15 டிக்கெட்-அ தினிச்சான்... நான் மெதுவா கூட்டத்தோட கூட்டமா போய் "நூறு...நூறு...நூறு"-னு முனங்க ஆரம்பிச்செ(ன்)... படம் மட்டும் நல்லா ஒடுச்சுனா, வர்ர காச வச்சு ரெண்டு மாசதுக்கு தங்கச்சியொட ஸ்கூல் பீஸ்-அ கட்டிரலாம்.

Saturday, August 05, 2006

ஹலொ!!!!

"அம்மா, நான் மணி பேசுரேன்!!!.."
"மணி குட்டியா!!?... எப்படி-ல இருக? உடம்புக்கு நல்லா இருக்கா-ல?"
"நான் நல்லா இருக்கென்... நீங்க அங்க எப்படி இருக்கீங்க?"
"ஏதொ இருக்கோம்..."
"என்ன இப்படி சொல்லுதீங்க?"

"வர வர கண்ணு கொஞ்சம் கொஞ்சம்-அ மறையுது.... கை கால் வலிக்குது..."
"டாக்டர் கிட்ட காட்டுனீங்கலா?"
"காட்டுனென் காட்டுனென்...என்ன 54 வயசாகுதுல்ல?!... ஆப்படிதான் இருக்கும்ங்கரன்... என்ன பன்ன சொல்லுத... இப்படியே அட்ஜஸ்ட் பன்னி கிட்டு பொக வேண்டியதுதான்...செரி இத விடு, உனக்கு வெல எப்படி பொகுது?"

"வேலை எல்லாம் நல்லா பொகுது... எடம் சூப்பர்-அ இருக்கு-மா...."
"அப்படியா? ஒரேடியா குலுருதா-ல? சுவெட்டர் பொட்டு கிட்டு வெலில பொ... பச்ச தன்னில குழிக்காத... "
"கொஞ்சம் குலுருதான்... ஆன வீட்டுகுல்ல ஹீட்டர் இருக்கு... "
"அப்ப செரி... அங்க இங்க போகும் போது பாத்து போய்ட்டு பாத்து வா.... கண்டத சாபிடாத..."
"செரிம்மா... கவல படாதீங்க..."
"நீ இங்க இருந்தாலாவது நான் சமச்சு போடுவென்... அங்க போய் இருக்கியே... என்ன சாப்புடுர?"

" கலம்பர கார்ன் ப்லேக்ஸ்... மத்தியானம் எதாவது ஸன்ட் விட்ச்.. ராதிரி சாதம், கொழம்பு எதாவது பன்னுவேன்"
"எப்படில சமைக்குர? நல்ல சமைகிய? நிரைய பழம் வாங்கி சாப்பிடு... தெனோம் காம்ப்லான் குடி... சேரியா?"
"சேரிமா.... "
"எப்பம்பா திரும்பி வருவ...?"
"இப்ப தானமா வந்துருகென்... இன்னும் ஒரு வருஷம் ஆகும்மா.."
"என்னமொ பொ... சம்பதிக்கரதுக்காக பொயாச்சு... என்ன பன்னுரது... இந்த வருஷம் திவாளி, பொங்கல் எல்லாதுக்கும் நானும் அப்பாவும் தான்..."
"ஓரு வருஷம் தான்மா... சட்டுனு பொய்ரும்..."

"சட்டுனு ஒடிட்டுன நல்ல இருக்கும்... தெனம் சாமி கும்புடு... என்ன?"
"கும்பிடுரேன்மா..."
"வேல பாக்குர எடத்துல நல்ல பேரு வாங்கனும்... நல்ல பெரு வாங்க நாள் ஆகும்... கெட்ட பேரு எடுக்க நிமிஷம் பொதும்... தெருஞ்சுதா??"
"செரிமா..."
"இப்ப என்ன நேரம் ஆகுது அங்க???.."
"நைட் 10.30-மா... "
"எதுக்கு இவலவு நெரம் முழிசிருக்க.. போய் படுல.... ஓடம்பு கெட்டுரும்..."
"ஆதெல்லம் பரவ இல்லம... நீன்க பெசுங்க..."
"இல்ல இல்ல... போய் படுல... அடுத வாரம் கூப்புடுரியா?"
"கூப்பிடுரேன்மா... இப்ப வைக்கவா..?"
"செரி... இப்ப வைகேன்... ஓடம்ப பாத்துகொல... வைகென் யென்ன?"
"செரிம்ம... நானும் வைகென்!"