படம்
வேக வேகமா சைகில் மிதிச்சதுல கால் வலி தாங்கல... மொத நாள் மொத ஷொ... நல்ல கூட்டம் இருக்கும்... சீக்கிரமா போய்ரனும்... இல்ல அவ்வளவுதான்!!! நேரா சைக்கில் கடைலெருந்து தியேட்டர்க்கு போயிருக்கலாம். என்ன பன்னுரது பசி தாங்கல... நெத்தைக்கு வெச்ச பழய சொறு நியாபகம் வந்துச்சு. ஒரே மிதி... வீட்டுக்கு வந்தாச்சு.காலங்காத்தால ரோட்ல ஆலெ இருக்காது. ஆனா தீயேட்டர் பக்கம் நெருங்குனா... அம்மாடி!!! யென்னா கூட்டம் இருகும்??!!!!!! போன படம் ரிலிசு ஆகும்பொது லத்தி சார்ஜ் கூட நடந்துச்சு.
"டேய் வீரா, கூட்டமா இருக்கும்டா... இன்னைக்கு அந்த பக்கம் போகாதடா... ஒரு வாரம் போகட்டும்டா..."
"யம்ம! ஒனக்கு வெர வெல இல்லயா?... சும்மா எதையாவது சொல்லி கிட்டே இருப்ப... சோத்த போடு... சாப்புட்டு கெளம்பனும்"
"போட்டு தொலையுரென்... மொத ஷொ-க்கே பொகனுமோ?"
"அதெல்லம் எங்களுக்கு தெரியும்... இதுவரைகும் மொத்தம் 24 படம்... மொத ஷொ..."
"பெரிய சாதன...."
"சாதாரனமா 4 ஷொ ஒட்டுவான்க... மொத ஒரு வாரதுக்கு 6 ஷொ... Daily ரெண்டு ஷொ ரசிகர் மன்ற ஷொ... எல்லா ஊருலெருந்தும் பயலுவ வருவானுங்க... "
"என்ன கருமமோ போ..."
பாதி சாப்பாடு ஆச்சு. விக்கல்.
"தண்ணிய குடும்மா..."
"மெதுவா சாப்புட்டு தொல... தீயேட்டர் ஓடி பொயிராது... படம்மும் ஓடி பொயிராது..."
"தொ பாரு... சும்ம வாய வைக்காத... படம் நல்லா ஓடனும்... மொத நாள்... 6 ஷொ....ஸுப்பர் ஹிட் ஆகனும்.... 200 நாள் ஓடனும்... "
"எதோ நீ காசு போட்டு எடுத்த மாதிரி குதிக்கிர..."
மிச்ச சொறும் ஆச்சு. கப்-ல இருந்த மிச்ச தண்ணில தட்டுல கைய கழுவீட்டு கெளம்பீட்டென்.
"எலேய்! எப்பல வருவ?..."
"இன்னும் கெளம்பவே இல்ல... அதுகுல்ல 'யெப்ப வருவ'.... மொத நள்ள?... கூட்டத பொருத்து..."
"இது புது சேருப்புல... இத போட்டுகிட்டு போய் அறுத்துகிட்டு வராத... "
"செருப்பே போடம பொக சொல்லுரியா?? வெளங்கும்... கொன்ஜ நெரத்துல வெயில் வந்துரும்... காலு பொத்து பொயிரும்..."
சைகில் ஸ்டான்ட தட்டி விட்டு ஏருனென். ஓரெ அழுத்து.
"பாத்து பொய்ட்டு பாத்து வால..."
"செரி செரி..."
வெகமா மிதிச்சென்... இன்னும் ரெண்டு திருப்பம் தான்... தியேட்டர் சந்து வந்துரும்.
தியேட்டர் சந்து. ரெண்டு போலீஸ். மொத நாள் ஷொ-ல? அதான்... போன தடவ வாங்குன லத்தி அடி இன்னும் நியாபகம் இருக்கு. ஆரரை தான் ஆகுது...இப்பவே கூட்டம் கேட்-க்கு வந்துருச்சு. சைக்கில ஒரம வைக்கனும். எங்க வைக்குரது?!?!... குமார் அண்ண(ங்) கடைல வைக்க வெண்டியதுதான். ஆனா அவரு கடைய திறக்க ஏலு ஆகும். அதுவரைகும் என்ன பன்னுரது?!?!?!?!... சைக்கில ஊருடிகிட்டு கூட்டம் பக்கம் பொய் நிந்நே(ன்). கூட்டத்துக்கு இடைல முத்து நின்னுகிட்டு இருதான்.
"எலேய் வீரா!!!!!!!... எப்பல வந்த?!?! கூட்டத பாத்திய??.."
"இப்பதான் வந்தேன்... சைக்கில வைக்கனும்..."
"குமார் அண்ண(ன்) வர லேட் ஆகும் பொல இருக்கு... நேர போய் நம்ம டீ கடை ஸ்டாண்டுல வை.."
"அவ(ன்) 5 ரூபா கேப்பான்..."
"மொத நாள் ஷொ... யொசிக்காத... பொய் வச்சுட்டு வா..."
டீ கடை ஸ்டன்ட்ல வச்சுட்டு, கசங்கி போன அஞ்ஜு ரூபா நோட்ட குடுத்தேன். ஒரு மாதிரி பாத்தான்.
"கவர்மன்டே இப்ப பழய அஞ்ஜு ரூபா நோட்டுதான் அச்சு அடிக்கிராங்க... எல்லம் செல்லும்..."
"இந்த வாய்க்கு மட்டும் கொறச்சல் இல்ல. டோக்கன புடி. தொலச்சுராத..."
"ஆமா... பெரிய டோக்கன்! சிகரட் அட்டைல 8-னு போட்டுருக்க... தொலச்சா நா(ன்) நல்ல அட்டைல எழுதி தாரே(ன்)..."
குடுத்த டொக்கன்-அ வாங்கிகிட்டு ஓடி வந்தென். முத்து கைல 15 டிக்கெட்-அ தினிச்சான்... நான் மெதுவா கூட்டத்தோட கூட்டமா போய் "நூறு...நூறு...நூறு"-னு முனங்க ஆரம்பிச்செ(ன்)... படம் மட்டும் நல்லா ஒடுச்சுனா, வர்ர காச வச்சு ரெண்டு மாசதுக்கு தங்கச்சியொட ஸ்கூல் பீஸ்-அ கட்டிரலாம்.

17 comments:
nalla irukkudu machi ...naan itha ehirpakkala ....good finish
dei ennaku tamil padika theriyadhu rassaaaa....englipish edhavudh ezhudu pa...
oppicer super...romba naalaiku apram Aanantha Vikatanla oru siru kathai padicha effect....ivlo nalla ezhuthuvinganu sollavae illa....gud ending....
super machi,As somas said I dint expect this climax
Gumm Gumm da...pattaya kelappitaa...oru balu mahendra touch irukku kadhaila....keep the thoughts coming!!!!
Somas and Anonymous - thanks for the appreciation on the twist
Ganesh - thanks for you kind words...
Gowri - yenakku unmaileyae "Anandha vikadan"la vantha santhosham!... Romba romba thanks!
Selva,
"yenakulla thongikittu irukara vadivela neenga thatti yezhupeeteenga..."
LOL! Thanks a lot
Poli - Great comment! thanks for taking time to read my blog!
nalla irukku vadi...finish was unexpected...i think thts how oru pakka kathaigal shud be..mothathil, innum ezhuthu..after all,
sithiramum kaip pazakkam,
senthamizum naap pazakkam..
vaazthukkal..
great da!
dei kalaki pota da...
romba nalla irududu...
kadaisi thirupu monai than
da highlighteeee.. super o super...
romba unexpected a irundudu ...
kalakkitta Vadi!!!sooooper, touchitta po!!
machi super da....
katha romba interest'a poitu irunthuchi... towards the end, i thought, namma aalu innum ticket'a vangala, blog mudiya pohuthu... oru vela vol-II'nu innoru blog ezhutha porayo'nu ninanchein da... but a single line to finish the story Xcellently was amazing and was never Xpected...
keep going & send more such blogs...
NACH!!!!
நான் எப்பவுமே Last தான். அதான் என் comment அ யாருமே படிக்க மாட்டாங்க. That's O.K da VADI, நெஜமாலுமே Super da
goyala ivalavu periya pista neeyu?? gud 1.. keep writing more..
Post a Comment