புழுக்கம்
பயங்கர வெயில். மதியம் 1.45... தண்ணி தாகம். ஆட்டொகார(ன்) காலெஜ் கேட்-ல இறக்கி விட்டுடான். காலெஜ் ஹஸ்டல் போய் ஸுட்கேஸ், படுகை எல்லாதையும் வச்சுரலம்-னு நினைச்சு வாட்ச்மென் கிட்ட போய் "காலெஜ் ஹஸ்டல் எங்க இருக்கு?"-னு கேட்டெ(ன்). பதிலுக்கு "புது அட்மிஸன்-அ?" நான் தலைய ஆட்டுனெ(ன்). அப்பாவ பாத்து "மொதல்ல போய் பீஸ் கட்டுங்க... நேர போன ஆபீஸ் வரும்... பீஸ் கட்டீடு ரஸீது வாங்கி கிட்டு, ஹஸ்டல் போன ரூம் ஸெலக்ட் பண்ணலாம்! ஹஸ்டெல் அந்த கோடி-ல இருக்கு..." னு கைய காட்டுனாரு... கண்ணுக்கு தெரிஞ்ச பில்டிங்-ல கடைசி பில்டிங்! வழியில ஒரு மரம் கூட இல்ல... அநேகமா முக்கா கிலொமீடர் இருக்கும்னு தோனிச்சு!
நானும் அப்பாவும் போய் ஆபீஸ்-ல பீஸ் கட்ட போனோ(ம்)! ஆபீஸ் வாசல்ல இருந்த வாட்டர் கேன்-ல தண்ணி எடுத்து எனக்கு மொதல்ல குடுத்தாரு! அவரும் ஒரு வாய் குடிச்சாரு! நெத்தியில வேர்வை தண்ணியா வடிஞ்சு அவரு சட்ட காலர் நனஞ்சு போய் இருந்துது!
அண்ணா யுனிவெர்சிட்டி-கு போய் காலேஜ் செலெக்ட் பன்னுரதுக்கு 2 வாரம் முன்னாடி அப்பா என்ன கூப்பிட்டு " மானேஜ்மென்ட் ஸீட் எல்லாம் என்னால வாங்க முடியாது! பேமென்ட் ஸீட் வாங்கி தரென்... நல்லா படிப்பியா?"-னு கேட்டாரு. பதில் சொல்ல கூட என்னால முடியல! தலைய மட்டும் ஆட்டினே(ன்)! கிளம்பரதுக்கு ஒரு வாரம் முன்னாடி அம்மா எனக்கு ஊருகா, இட்டிலி பொடி செஞ்சாங்க! சட்ட பான்ட் எல்லாம் ஸுட்கேஸ்-ல எடுத்து வச்சாங்க! ராத்திரி படுக்கும் பொது, என்னொட ரூம்-கு வந்து பக்கதுல உக்காந்துகிட்டு கண் கலங்கிப்போய் "காலேஜ் போய் நல்லா படில... அப்பா ரொம்ப கஷ்ட்ட பட்டு படிக்க வைக்கா! அங்க போய் நல்ல பையங்க கூட சேரு... ஓழுங்க ஒடம்ப பாத்துக்கொ... செரியா சாப்பிடு! வாரதுக்கு ஒரு வாட்டி லெட்டர் போடு... போன் பன்னு!" எனக்கு தொண்டைய கெட்டிகிட்டு வந்துடுச்சு. "அம்மா இன்னும் ஒரு வாரம் இருகுல்லாம்மா?" அம்மா அதையெல்லம் காதுல வாங்காம தொடர்ந்து "அப்பா கஷ்ட பட்டு படிக்க வைக்குரதுக்கு ஏத்த மாதிரி நல்லா படி! இன்னும் ஸ்கூல் மதிரி நினைச்சுகிட்டு இருகாதல! வெளியில வரும் பொது அண்ண-ன மாதிரி வேலையொட வரனும்.... அதுக்கும் அப்பா எதாவது பன்னுவானு நினைச்சுகிட்டு இருகாதல!"... மறுபடியும் பதில் சொல்ல முடியல! தலைய மட்டும் ஆடினெ(ன்)!
காலேஜ் பீஸ், ஹாஸ்டல் பீஸ் எல்லாம் கட்டீட்டு ஹாஸ்டல ரூம் செலக்ட் பண்ண கிழம்பினோம்! மணி 2.20! அந்த வெயில்ல அப்பா ஒரு ஸுட்கேஸ் + ஒரு ஹன்ட்-பாக், நா(ன்) ஒரு ஸுட்கேஸ் + படுகைய எடுத்துகிட்டு ஹாஸ்டல் பாத்து நடந்தோம். மொகத்துல அணல் அடிக்குது! "அப்பா! நீங்க என்னைக்கு ஊருக்கு கிளம்புரீங்க?" " இன்னைக்கு நைட்டு கிளம்பலம்னு இருக்கென்" "ஹாஸ்டல் போய் எல்லாதையும் வச்சுட்டு அம்மாவுக்கு பொன் பண்ணலாம்பா..." அப்பா கிட்ட செல் பொன் கிடையாது! அவரொட வருமானத்துக்கு அது தேவை இல்லதா ஆடம்பரம்! வழியில அப்பா கிட்ட அதிகமா பேசல! ஹாஸ்டலுக்கு வரும்பொது 2.40!
அப்பாவுக்கு அப்ப 52 வயசு! வயசான காலத்துல அவருக்கு இப்படி ஒரு கஷ்டம்! ஹாஸ்டல் வந்து ரூம் செலக்ட் பன்னினொம்( ரூம் # 322). மூணாவது மாடில ரூம்! ஸுட்கேஸ்யும் தூக்கிகிட்டு மூணவது மாடி வந்து செந்தாச்சு! ரூம்ல பேன் பொட்டு ஒரு 15 நிமிசம் ஒன்னுமெ பெசாம உக்காந்துட்டாரு! பயன்கர அமைதி! நா(ன்) போய் தண்ணி எடுத்துட்டு வந்தேன்! வாங்கி குடுச்சிட்டு கர்சீப்பால வேர்வைய தொடச்சிட்டு அப்படியே உக்கான்திருந்தாரு! மெதுவா என்ன பாத்து "நல்லா சாப்பிடு! ஒடம்ப பாத்துக்கொ! நல்ல பசங்கலா பாத்து சேரு! மாசம் மாசம் காசு அனுப்புரென்... பான்க் அகௌன்ட் ஓபன் பண்ணி பொட்டுக்கோ! 2 மாசத்துக்கு ஒரு தடவ நான் வந்து உன்ன பாக்குரெ(ன்)... வாரத்துக்கு ஒரு லெட்டர் போடு... மரந்துராத!" "செரிப்பா"
கொஞ்சம் யொசிச்சிட்டு, "நல்லா படி! படிச்சா மட்டும் தான் மதிப்பு! அண்ணன மதிரி நல்ல வேலைக்கு பொகணும்... செரியா?" தலைய மட்டும் ஆடினென்! அதுக்கு மெல எதுவும் பெசாம "செரி, நெராமகுது, இங்கேருந்து போய் பஸ் புடிச்சு ஊருக்கு போரதுக்கு கரெக்டா இருகும்... நான் கெளம்பட்டுமா?" எனக்கு ஒரு நிமிஷம் ஒன்னுமெ ஓடல! நாக்கு வரண்டு பொச்சு.. "செரிப்பா..."னு கஷ்டபட்டு சொனென்! "அம்மாக்கு நான் பொன் பண்ணி சொல்லிட்டு பஸ் புடிச்சு போரென்! இந்த வெயில்ல கேட் வரைக்கும் நீ அலையாத"-னு சொல்லிட்டு ஒரு வாய் தண்ணிய மறுபடியும் குடிச்சிட்டு கிளம்பிட்டரு!
வெளியில இருந்த புழுகத்த விட அப்பாவுக்கு மனசுக்குள்ள புழுக்கம் அதிகமா இருந்துதோ?!

18 comments:
அப்பாவோடப் புழுக்கத்தப் போக்கிட்டீங்கதான?
என்னோட காலேஜ் முதல் நாள் அனுபவத்த நெனச்சுப் பாக்க வச்சுட்டீங்க!!!
Great machi. Amazing da. Too heavy stuff. Regding the prev.post comment: When in TMC culs, v were looking thru the displayed paintings and one showed some memories' fotographs and had the same caption on it. " Rewind button,(Mudhalvan Punch dialogue.Ithu than P.D. Punch Dialogue). marakka manam koodu thillaiye.
amazing...oru middle class family feelingsa appadiyae kondu vanthuteenga...really gud...
அப்படிப்பட்ட அருமையான தாய் தந்தையின் விருப்பப்படி நன்கு படித்து, நல்ல வேலை பெற்று அவர்களது மனம் குளிர வைத்தீர்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Machan...nalla realisticaa irukku da..hats off to you...ennaku mothal naal nyaabagam kannu munnadi nikkudhu...anyways it looks like u did get the company of "good" boys.
typically vadi da! i'm wondering why you never attepted to write before... duffer! chacea illa da! pirichita.... scene by scene onnoda appa amma en kannuku munnadi vandhanga... n of course, namma hostel! :-) marakka mudiyuma.... n as poli said, u did get the company of 'good boys' ;-)
நன்றாக இருந்தது...இயல்பான நடை..மனதை கொஞ்சம் என்னவோ செஞ்சுது பாத்துக்கோ..
Thanks அருட்பெருங்கோ dondu(#4800161)!முடிஞ்ச அளவுக்கு நல்ல படிச்சு இப்ப நல்ல வேலை-ல US இருகேன்!
Gowri! Thanks for continuouse reading my blog and giving comments!
Goki - PD-ku ippadi oru full form irukum-nu nan ninaikala! Thakns for remembering/reminding about TMC!
Poli - I did get very good roommates for sure! even my dad and mom says even now! :)
Rama - Nee yepavumae ippadi than da! yenna romba puzhthu pesuvae! :)... LOL!
Mr. Tamilzpriyan - Like gowri - Thanks for keep reading my blog frequetly! Thanks for those kind words!
Good one, as usual.
athan best outgoing student a vanthu.. apram TCS la join panni .. US um pogita.. aparam enna..
(but now r ur parents really happy with both their children out of their sight??) u mail me abt it.. lets take this discussion offline..
machi i tried for 30 minutes, could not complete reading it. But whatever littele i read, i loved it. Try writing something in English please
Does ur appa read this and what is his comments? Good thinking. I am damn sure u have made ur parents proud of U and believe it will continue? Correct aa Vadi??
I guess my parents have not read this yet!...
Post a Comment